மீண்டும் மீண்டும் இந்திய எல்லைப் பகுதியில் ட்ரோன்கள்? உளவு பார்க்கிறதா பாகிஸ்தான்?

மீண்டும் மீண்டும் இந்திய எல்லைப் பகுதியில் ட்ரோன்கள்? உளவு பார்க்கிறதா பாகிஸ்தான்?
மீண்டும் மீண்டும் இந்திய எல்லைப் பகுதியில் ட்ரோன்கள்? உளவு பார்க்கிறதா பாகிஸ்தான்?

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் டிரோன் பறந்து வந்ததை அடுத்து அதனை தேடும் பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் அதுவும் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பாகிஸ்தானின் ட்ரோன்கள் பறந்து வருகின்றது. ட்ரோன்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் கண்காணிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வப்போது இந்திய தரப்பில் இத்தகைய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ் பூரை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் பகுதியிலிருந்து ட்ரோன் ஒன்று வந்துள்ளதாக தெரிகிறது. அந்த ட்ரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்து அதனை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். எனினும் அந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லைக்குள் மறைந்தது. அந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்திருக்கலாம் என்று பஞ்சாப் எல்லை படையை சேர்ந்த  அஸிப்ஜலால் கூறி இருக்கிறார். இதற்கிடையில் அதனை கண்டுபிடிக்கும் பணிகள் என்பதும் எல்லை பாதுகாப்பு படை சார்பாக முடிக்கி விடப்பட்டுள்ளது.


கடந்த மூன்று நாட்களில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்திய எல்லைப் பகுதிக்குள் வரும் நான்காவது டிரோன் இது என எல்லை பாதுகாப்பு படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 22 டிரோன்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com