சந்திரயான் 3 வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொன்ன பாகிஸ்தான்!

சந்திரயான் 3 வெற்றிக்கு பல நாடுகளும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தானும் இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

நிலவில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக கால் பதித்துள்ளதற்கு பாகிஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளது.

சந்திரயான் 3
சந்திரயான் 3pt desk

ஆகஸ்ட் 23ம் தேதி திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு, சந்திரனில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பத்திரமாக தரை இறங்கியது. இதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளையும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சந்திரயான் வெற்றிக்கு பாகிஸ்தான் அரசு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளிதுறை அமைச்சகம் “இது ஒரு மகத்தான விஞ்ஞான சாதனை. பெருமையை ஏற்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டுக்கு உரியவர்கள்” எனக்கூறி புகழ்ந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com