ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி
Published on

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு 2 ஆண்டுகள் உறுப்பினர் பதவி வழங்க ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

ஐநா பாதுகாப்பு சபை மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மீதமுள்ள 10 உறுப்பினர்கள் மற்ற நாடுகளில் இருந்து சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர். 

ஐநாவில் 5 தற்காலிக உறுப்பினர் இடங்களுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள் முன்மொழிந்துள்ளன. இதன்படி, 2021 மற்றும் 22 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி கிடைக்கும். ஆதரவு தெரிவித்ததற்காக சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 55 நாடுகளுக்கு ஐநாவுக்கான இந்திய தூதர் சையது அக்பரூதீன் நன்றி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com