விடுதலை பெற்ற நாளில் இருந்து நெருக்கடிக்குப் பஞ்சமில்லாத பாகிஸ்தான்

விடுதலை பெற்ற நாளில் இருந்து நெருக்கடிக்குப் பஞ்சமில்லாத பாகிஸ்தான்
விடுதலை பெற்ற நாளில் இருந்து நெருக்கடிக்குப் பஞ்சமில்லாத பாகிஸ்தான்

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

1947-ஆண்டு விடுதலை பெற்றது முதல் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளையும் பிராந்தியச் சிக்கல்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நாடு பாகிஸ்தான்.

1948-ஆம் ஆண்டில் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக சண்டையிட்டது. 1971-ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தான் பிராந்தியம் தனிநாடாக முயன்றதால் பெரும் போர் மூண்டது. 1974-ஆம் ஆண்டு வங்கதேசத்தை அங்கீகரித்தது பாகிஸ்தான். 1979-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஸுல்பிகர் அலி புட்டோ தூக்கிலிடப்பட்டார்.

1988-இல் ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்டார். 1999-ஆம் ஆண்டு ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபை பதவியில் இருந்து அகற்றினார். 2007-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். 2013-ஆம் ஆண்டில் நவாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். 2017-ஆம் ஆண்டில் நவாஸ் ஷெரீப் மூன்றாவது முறையாக பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இப்படி தொடர்ந்து அரசியல் நெருக்கடிகளிலும் நிச்சயமற்ற தன்மையிலும் சிக்கித் தவிக்கிறது பாகிஸ்தான். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com