பாகிஸ்தான்: 60 ஆண்டுகளில் 'மிக மோசமான' நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சிந்து மாகாணம்

பாகிஸ்தான்: 60 ஆண்டுகளில் 'மிக மோசமான' நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சிந்து மாகாணம்
பாகிஸ்தான்: 60 ஆண்டுகளில் 'மிக மோசமான' நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சிந்து மாகாணம்

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் 60 ஆண்டுகளில் மிக மோசமான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது என்று பாகிஸ்தான் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிந்துவில் உள்ள குடு தடுப்பணையின் தலைமை பொறியாளர் தெரிவித்த தகவல்களின்படி, குடு உட்பட சிந்து மாகாணத்தில் மூன்று தடுப்பணைகள் கிட்டத்தட்ட 37% நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. மாகாணத்தில் மூன்று தடுப்பணைகள் நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், விவசாயிகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் நெல் விதைப்புக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரி விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.  ஜூலை மாதத்தில் விவசாயிகள் விதைப்பு பணியை செய்யலாம் என்றும் பொறியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சிந்து மாகாணம் போலவே கோட்ரி தடுப்பணையும் மிகவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது, அதாவது 50.44 சதவீதம் பற்றாக்குறை இந்த தடுப்பணையில் ஏற்பட்டிருக்கிறது.

அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக தெற்காசியாவில், குறிப்பாக பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இங்கு 2040ஆம் ஆண்டுக்குள் முழுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும். கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) பாகிஸ்தானை மூன்றாவது இடத்தில் வைத்திருக்கிறது. பாகிஸ்தானில் தனிநபருக்கான நீர் கிடைப்பது 1,000 கன மீட்டருக்கு கீழே குறைந்துள்ளது. இது 1961 இல் 3,950 கன மீட்டராகவும், 1991 ல் 1600 ஆகவும் இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com