காஷ்மீர் விவகாரம் : இந்திய தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் : இந்திய தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்
காஷ்மீர் விவகாரம் : இந்திய தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியாவை அழைத்த பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் சோஹாலி முகமது, இந்தியாவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானங்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்ததாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

முன்னதாக காஷ்மீர் குறித்த இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா முக்கிய முடிவு எடுத்துள்ள நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் இன்று கூடுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com