\
ராணுவம் அதிரடி: வெள்ளைக் கொடியுடன் உடல்களை மீட்ட பாக்.படையினர்- வீடியோ

ராணுவம் அதிரடி: வெள்ளைக் கொடியுடன் உடல்களை மீட்ட பாக்.படையினர்- வீடியோ

ராணுவம் அதிரடி: வெள்ளைக் கொடியுடன் உடல்களை மீட்ட பாக்.படையினர்- வீடியோ
Published on: 

எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த 2 பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை, வெள்ளைக் கொடியுடன் வந்து தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆம் தேதி, ஹஜிபூர் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே, அத்துமீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. 10 பயங்கரவாதிகளை இந்தியாவுக் குள் ஊடுருவ செய்வதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். அவர்களில் 2 வீரர்களின் உடல்களை, வெள்ளைக் கொடியை காட்டியபடி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் வீரர்கள், எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com