\
ஜம்மு: சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் உளவாளி சுட்டுக்கொலை!

ஜம்மு: சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் உளவாளி சுட்டுக்கொலை!

ஜம்மு: சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் உளவாளி சுட்டுக்கொலை!
Published on: 

ஜம்முவில் சர்வதேச எல்லையில் ஊடுறுவ முயற்சித்த பாகிஸ்தான் உளவாளியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்முவின் சம்பா பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று காலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சக் பகீரா என்ற இடத்தில் நபர் ஒருவர் இந்திய எல்லைக்குள்ள ஊடுறவ முயற்சி செய்தார். அதனைக் கண்ட எல்லைப் பாதுகாப்பு படையினர் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனாலும், அந்த மர்ம நபர் இந்திய எல்லையின் வேளி இருக்கும் பகுதியை ஆக்ரோஷமாக முன்னேறி வந்ததால் அவரை சுட்டுக்கொன்றோம் என்று எல்லைப் பாதுகாப்பு படை விளக்கமளித்துள்ளது. மேலும் அந்த நபர் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவாளியாக இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com