பாக். அத்துமீறி தாக்குதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பலி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பூஞ்ச் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், தம்பதி 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் 2 குழந்தைகள் காயமடைந்தனர். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, நேற்று பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேலும், 3 வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தானின் இந்த தாக்குதலால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.