\
ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மீண்டும் மனு

ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மீண்டும் மனு

ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மீண்டும் மனு
Published on

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ப‌.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்‌தபோது, கடந்‌த 2007ஆம் ஆண்டு‌ ஐ‌‌என்‌எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305‌ கோடி ரூபாய் அந்நிய‌ நேரடி முதலீடு வழங்க அனுமதி அளிக்கப்பட்டதில், முறைகேடு நடந்த‌தாக சிபி‌ஐ வழக்குப்‌பதிவு செய்தது‌. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ப.சிதரம்பரத்தை சிபி‌ஐ கைது செய்‌திருந்தது. 

நீதிமன்ற‌க் காவலில் திகார் சிறையில்‌ அடைக்கப்பட்டுள்ள ப.சிதரம்பரம்,‌ ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் கெய்ட் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகிய ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com