“தயாரான சிதம்பரம்.. தயாராகாத சிபிஐ” - சிபிஐ-யுடன் சிதம்பரத்தின் நேற்றைய இரவு!

“தயாரான சிதம்பரம்.. தயாராகாத சிபிஐ” - சிபிஐ-யுடன் சிதம்பரத்தின் நேற்றைய இரவு!

“தயாரான சிதம்பரம்.. தயாராகாத சிபிஐ” - சிபிஐ-யுடன் சிதம்பரத்தின் நேற்றைய இரவு!
Published on

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட பின்னர் சிபிஐ-யுடன் அவரது நேற்றைய இரவு எப்படி கடந்தது என்பது தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல்களின்படி, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டார். நாடே பரபரப்பானது. அனைத்து ஊடகங்களும் சிபிஐ அலுவலகத்தில் குவிந்திருந்தன. பலரும் சிபிஐ அலுவலகத்தை வட்டமடித்தனர். இப்படி நாடே அமைதி குலைந்து பேசிக்கொண்டிருந்த இரவில், துளியும் சலனம் இன்றி மிகவும் அமைதியாக இருந்துள்ளார் கைது செய்யப்பட்ட சிதம்பரம்.

இரவில் சிதம்பரத்திடம் எந்த விசாரணையையும் நடத்தாத சிபிஐ, அவருக்கு அங்கேயே மருத்துவ பரிசோதனையை ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் அவருக்கு வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஏதேனும் இருக்கிறதா ? அப்படி எதுவும் மருந்துகள் தேவையா என்றும் மருத்துவர்கள் கேட்டறிந்துள்ளனர். அதன்பிறகு உணவு, உறக்கம் என எதார்த்தமாக இருந்துள்ளார் சிதம்பரம். சிபிஐ அலுவலகத்தில் இருக்கிறோம், கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்ற பயம் அவருக்கு சிறிதும் இல்லையாம். எப்படி இருக்கும் ? ஏனென்றால் சிபிஐ தலைமை அலுவலகத்தை 2011ஆம் ஆண்டு திறந்து வைத்ததே சிதம்பரம் தானே. அவருக்கு நன்கு பழக்கப்பட்ட இடம் தான் அது. 

இரவில் தூங்கிய சிதம்பரம் அதிகாலையிலேயே எழுந்து, காலைக் கடைமைகளை முடித்து விசாரணைக்கு தயாராகிவிட்டாராம். ஆனால் சிபிஐ தயாராகவில்லை. அவருக்கு காலை உணவு கொடுத்துள்ளனர். பின்னர் 10 மணிக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே சிதம்பரத்துடன் எதார்த்தமாக உரையாடும்போது, கைது செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு முழுவதும் எங்கிருந்தீர்கள் ? உங்கள் செல்போன் தொடர்பில் இல்லையே, வேறு ஏதேனும் செல்போனை பயன்படுத்தினீர்களா? என சிபிஐ கேட்டுள்ளனர். ஆனால் அனைத்து கேள்விகளுக்கு அமைதியான சிரிப்பையே பதிலாக சிதம்பரம் கொடுத்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com