\
குற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயர் சேர்க்க நடவடிக்கை - சிபிஐ

குற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயர் சேர்க்க நடவடிக்கை - சிபிஐ

குற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயர் சேர்க்க நடவடிக்கை - சிபிஐ
Published on

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான எந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்றிரவு ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைதுக்குப் பின்னர் சிபிஐ தலைமை அலுவலகத்தில் சிதம்பரம் தங்கவைக்கப்பட்டார். அவரிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் சிதம்பரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் சிபிஐ எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. மேலும், குற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள சிபிஐ, முறைகேட்டில் சதியை வெளிக்கொண்டுவர காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் எனக் கோரியுள்ளது. சிதம்பரம் பேசமால் இருப்பது சுதந்திரமாக இருக்கலாம், ஆனால் வழக்கிற்கு ஒத்துழைக்கமால் இருக்க முடியாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் அளித்திருந்த பேட்டியில், முதல் தகவல் அறிக்கையில் தங்கள் பெயர் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com