புதிய சட்டத்திருத்த மசோதா குறித்து பா.சிதம்பரம் கருத்து
புதிய சட்டத்திருத்த மசோதா குறித்து ப.சிதம்பரம் கருத்துweb

CHIDAMBARAM SPEAKS | பதவி பறிப்பு மசோதா.. பாகிஸ்தான் வரிசையில் இந்தியா.. எங்கு தவறு?

ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகளை கைதான 31-வது நாள் பறிக்க இந்த மசோதாவைக் களம் இறக்கியிருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. இதற்கு ‘130-வது அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா, 2025’ என்று பெயர்.
Published on
Summary

ஊழல் வழக்கில் கைதானால் பிரதமர், முதலமச்சரை கூட கைதுசெய்யலாம் எனும் சட்டத் திருத்தத்தில் இருக்கும் குறைகளை பட்டியலிடுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 368-வது கூறு, ‘அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்யும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குகிறது; அந்த சட்டக்கூறின் துணைப் பிரிவு (2), மற்ற விஷயங்களுடன் இதையும் கூறுகிறது:

(2) அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்யும் எந்த நடவடிக்கையையும் ஒரு மசோதாவை இயற்றுவதன் மூலம் தொடங்க முடியும்… அந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும், அவைக்கு வரும் உறுப்பினர்கள் எண்ணிக்கையில், மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்டோர் அதை ஆதரித்திருக்க வேண்டும்; நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும்; அந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் தந்த பிறகு, அரசமைப்புச் சட்டத்துக்கு செய்த ‘திருத்த நடவடிக்கை’ முழுமை அடையும்…

ப சிதம்பரம்
ப சிதம்பரம்

இப்போது பாரதிய ஜனதா தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும், அரசமைப்புச் சட்டத்துக்கு திருத்தம் செய்யும் அளவுக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லை. மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 293 பேரும், மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 பேரில் 133 பேரும்தான் அதற்கு உள்ளனர். அவையின் அனைத்து உறுப்பினர்களும் அவைக்கு வந்து வாக்களித்தால், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அதற்கு நிச்சயம் இருக்காது.

எதிர்க்கட்சிகள் அனைத்துமே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இல்லை என்பதுதான் இதில் வினோதம்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து மக்களவையில் 250, மாநிலங்களவையில் 112 உறுப்பினர்களைப் பெற்றுள்ளன. மக்களவையில் 182, மாநிலங்களவையில் 82 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தால் அது நிறைவேறாது. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்துமே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இல்லை என்பதுதான் இதில் வினோதம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பாரதிய ராஷ்ட்ர சமிதி, பகுஜன் சமாஜ் மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகள் ஒவ்வொரு கட்டத்தில், ஒவ்வொரு காரணத்துக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆதரித்துள்ளன. அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரானவைதான், ஆனால் அவை ‘இந்தியா’ அணிக்கு ஆதரவு தெரிவிப்பதென்பது பரிசீலனைக்கு வரும் பிரச்சினைகளைப் பொருத்துத்தான் இருக்கிறது.

புதிய சட்டத்திருத்த மசோதா குறித்து பா.சிதம்பரம் கருத்து
ப சிதம்பரம் எழுதும் | மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் அளித்த வாக்குறுதி என்னானது..?

சூதாட்ட அணுகுமுறை

இத்தகைய நிலையில்தான், ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகளை கைதான 31-வது நாள் பறிக்க இந்த மசோதாவைக் களம் இறக்கியிருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. இதற்கு ‘130-வது அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா, 2025’ என்று பெயர். இந்த மசோதாவை அவையில் அறிமுகம் செய்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கும் உடனடியாக அனுப்பிவிட்டது அரசு.

மாநிலங்களவை
மாநிலங்களவை

மேலோட்டமாகப் பார்த்தால், நேர்மறையான உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட, எளிமையான மசோதா போலத்தான் இது தெரியும்: ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலும் சிறைத் தண்டனை வழங்கக் கூடிய குற்றங்களில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, 30 நாள்களுக்கும் மேல் காவலில் இருக்கும் நிலையில் (பிரதமர், முதலமைச்சர்கள், ஒன்றிய-மாநில அமைச்சர்கள் அனைவரும்) - குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் பதவியைப் பறிப்பதுதான் இதன் நோக்கம். மசோதா குறிப்பிடும் 30 நாள்களுக்குள் பெரும்பாலும் குற்றவியல் வழக்கு விசாரணை முழுமையடைந்துவிடாது, குற்றப்பத்திரிகைக்கூட தாக்கல் செய்யப்பட மாட்டாது, குற்றச்சாட்டுகள் கூட நீதிமன்றப் பரிசீலனைக்குக் கிடைக்காது, விசாரணைகூட மேற்கொண்டு நடக்காது, தண்டனை வழங்கப்படுவது நிச்சயம் நடக்கவே நடக்காது. இப்படி எதுவுமே நடைபெறாவிட்டாலும் 31-வது நாள் அவர்கள் வகித்து வரும் பதவிகள் பறிக்கப்படும், அத்துடன் அவர்கள் ‘குற்றவாளிகள்’ என்ற பட்டமும் அவர்கள் மீது கறையாகப் படிந்துவிடும்.

அரசமைப்புச் சட்டமும் அரசியல் தார்மிகமும் வலியுறுத்தும், பொது வாழ்வில் நேர்மையைத் தூக்கிப் பிடிப்பதற்காகத்தான் இந்த 130-வது சட்டத்திருத்த மசோதா என்று பாஜக முரசு அறைகிறது. அதன் வாதத்தின் மையக்கரு இதுதான்: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதைவிட உயர்வான இலட்சியம் வேறு உண்டா என்ன? ஊழல் செய்த அமைச்சர் (அல்லது முதலமைச்சர்) சிறையிலிருந்து கொண்டே ஆட்சி செய்யலாமா? அரசு கொண்டுவந்துள்ள மசோதாவை ஆதரிப்பவர்கள் உண்மையான நாட்டுப் பற்றாளர்கள், தேசியவாதிகள்; இதை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள், நகர்ப்புற நக்ஸல்கள் அல்லது பாகிஸ்தான் ஏஜெண்டுகள்!

புதிய சட்டத்திருத்த மசோதா குறித்து பா.சிதம்பரம் கருத்து
ப.சிதம்பரம் எழுதும்| ஆட்சி மாறும்.. நியாயத் தீர்ப்பு நாளில் தேர்தல் ஆணையம் பதில் சொல்லும்

உண்மை அதற்கு மாறானது…

குற்றவியல் நடைமுறைச் சட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை அனுபவித்தவர்கள் கருத்துப்படி அது மிகவும் அச்சமூட்டுவது.

இப்போதுள்ள நிலையில்,

Ø எல்லா சட்டங்களுமே – பொது சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) உள்பட - அரசை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தும் ஆயுதங்களாகத்தான் கையாளப்படுகின்றன,

Ø எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் (சாதாரண காவலர்கூட) யாரையும் பிடியாணை (வாரண்ட்) இல்லாமல் கைது செய்ய முடியும் – அவர் ஏதோவொரு குற்றத்தைச் செய்துவிட்டார் என்ற சந்தேகமே, கைதுக்குப் போதுமானது.

Ø கீழமை விசாரணை நீதிமன்றங்கள், கைதானவர்களை பிணையில் விடுவிப்பதையே பெரும்பாலும் வெறுக்கின்றன; நீதிபதி கிருஷ்ணய்யர் கூறிய, ‘பிணைதான் (பெயில்) முதலில் பரிசீலிக்கப்பட வேண்டும் – சிறையில் அடைப்பது விதி விலக்காகத்தான் இருக்க வேண்டும்’ என்பது கடைப்பிடிக்கப்படுவதில்லை.

Ø எந்தப் குற்றப் புலனாய்வு வழக்கிலும் முதல் விசாரணையின்போது உயர் நீதிமன்றங்கள் பிணையில் விடுதலை தருவதில்லை. அந்த விசாரணையை அரசுத் தரப்பு முடிவில்லாமல் ஏதேதோ காரணங்களைச் சொல்லி இழுத்துக்கொண்டு போன பிறகு 60 அல்லது 90 நாள்கள் கழித்தே பிணை விடுதலை தருகின்றன.

Ø புலம்பும் அளவுக்குத் தீவிரமாகிவிட்ட இந்தப் பிரச்சினைகளால் உச்ச நீதிமன்றத்திடம் அன்றாடம் பல வழக்குகள் பிணை விடுதலைக்காக மட்டுமே வருகின்றன. விடுதலை வழங்கும் முதல் புகலிடமாக உச்ச நீதிமன்றம்தான் இப்போது செயல்படுகிறது.

Ø இந்த மசோதாவில் பிரதமரையும் சேர்த்திருப்பது நகைப்புக்குரியது. பிரதமரைக் கைது செய்ய எந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கும் துணிவு வராது.

புதிய சட்டத்திருத்த மசோதா குறித்து பா.சிதம்பரம் கருத்து
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும் | வெண்கலக்கடை யானை ட்ரம்ப்| என்ன செய்யவேண்டும் இந்தியா?

உறுதியாக எதிர்த்து நிற்போம்

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் திரிணமூல் காங்கிரஸும் சேர்ந்தாலே இந்த மசோதாவைத் தோற்கடிக்கும் எண்ணிக்கையைப் பெற்றுவிட முடியும். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியோ மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஆதரவைத் திரட்டிவிட முடியும் என்று நம்பிக்கையோடு இருக்கிறது. சில எதிர்க்கட்சிகளையே தனக்கு ஆதரவாகச் செயல்பட வைக்கவும், எதிர் வரிசையிலிருந்து சில உறுப்பினர்களைத் தனியே பிரித்து ஆதரிக்கச் செய்யவும் அது ஏதேனும் தந்திரங்களைப் பின்பற்றக் கூடும். அவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரை வாக்களிப்பு தினத்தன்று வராமலும் ‘காணாமல் போகச் செய்ய; அது திட்டமிடக்கூடும், அல்லது என்னுடைய அறிவெல்லைக்கு எட்டாத வேறு உத்தி கூட அதனிடம் இருக்கக் கூடும்.

பதவிப் பறிப்பு மசோதாவுக்கான போர்ப் பரணியை பிரதமரும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரும் முழங்கிவிட்டார்கள், அவர்களுக்கு விசுவாசமிக்க ஊடகங்களும் அதை விதந்தோதி வரவேற்றுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு இந்த மசோதா விவகாரம் எளிதில் முடிந்துவிடாதபடிக்கு அதைத் தடுத்து நிறுத்தி வைக்கக் கூடும் (ஒரே நாடு – ஒரே சமயத்தில் தேர்தல் விவகாரத்தைப் போல). பிஹார் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் (2025), பிறகு அசாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் (2026) ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் முடியும்வரை இதைத் தடுப்பது சாத்தியமே.

what reasons of india alliance crack
இந்தியா கூட்டணிமுகநூல்

இப்படி ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் 2014 முதல் கைது செய்யப்பட்டு பிணை விடுதலை வழங்கப்படாமல் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் (ஆகஸ்ட் 22, 2025) ஒரு செய்தியில் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட 25 அரசியல் தலைவர்கள் 2014-க்குப் பிறகு பாஜகவில் சேர்ந்துவிட்டதாகவும் அவர்களில் 23 பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும்கூட அது கூறுகிறது! என்னுடைய நினைவுக்கு எட்டியவரையில் 2014-க்குப் பிறகு எந்த பாஜக அமைச்சரும் கைது செய்யப்படவில்லை.

ஒரு வேளை இந்த மசோதா மட்டும் நிறைவேற்றப்படுமானால், பெலாரஸ், வங்கதேசம், கம்போடியா, கேமரூன், காங்கோ (டிஆர்சி), மியான்மர், நிகாரகுவா, பாகிஸ்தான், ரஷ்யா, ரவாண்டா, உகாண்டா, வெனிசூலா, ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிடும். இந்த நாடுகளில்தான் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவது தொடர் வழக்கம். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தால் 130-வது திருத்த மசோதா தோல்வி அடையும். அந்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்போது - நிறைவேறாமல் நிச்சயம் தோல்வி அடையும்

புதிய சட்டத்திருத்த மசோதா குறித்து பா.சிதம்பரம் கருத்து
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|பாஜக, தன் ‘செயல்வீரரை’ கைவிட்டது ஏன்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com