ரூ. 200 விலை குறைந்த சமையல் எரிவாயு சிலிண்டர்... காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதென்ன?

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, 200 ரூபாய் குறைக்கப்பட மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்திருந்தது. அதன்பேரில் இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
சமையல் எரிவாயு
சமையல் எரிவாயுFacebook

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு எரிவாயு உருளை விலையில் 400 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கூடுதலாக 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.

மத்திய
அமைச்சரவைக் கூட்டத்தில்
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்Facebook

இதுதொடர்பாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிலிண்டர் விலை குறைப்பு இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னையில் 14.2 கிலோ எடையிலான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் 1,118.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 200 ரூபாய் விலை குறைந்து 918.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல், டெல்லியில் 903 ரூபாய்க்கும், மும்பையில் 902.50 ரூபாய்க்கும், கோல்கட்டாவில் 929 ரூபாய்க்கும் கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேஸ் சிலிண்டர் விலை குறைப்பால் நாடு முழுவதும் 3 கோடி பயனாளிகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் சிலிண்டர் விலைமாற்றத்தை காங்கிரஸ் ‘தேர்தல் தோல்வி பயத்தால் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு குறைத்துள்ளது’ என விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “கர்நாடகாவில் பாஜக தோல்விக்கு சிலிண்டர் விலையேற்றம் முக்கிய காரணம். இதனால் அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் பாஜக தோல்வியை எதிர்நோக்கி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், Facebook

மாநில தேர்தல், மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைவோம் என்று பிரதமருக்கு பயம் வந்துவிட்டது. இதனால் வரும் நாட்களில் மேலும் பல பரிசுகளை அவர் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தன் x சமூக வளைதலத்தில் பதிவிடுகையில்,

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

“தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் காஸ் விலையை ரூ. 200 குறைத்திருப்பதே அறிகுறி! ரூ1,100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு, திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்! வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com