\
ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீட்டிப்பு

ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீட்டிப்பு

ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீட்டிப்பு
Published on

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நாளை மதியம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த வாரம் ப.சிதம்பரம் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 நாட்கள் சிபிஐ காவல் அளித்து டெல்லி சிபிஐ தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. சிபிஐ கைது செய்த பின்னர், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் 26ஆம் தேதி (இன்று) வரை சிதம்பரத்தை கைது செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ப.சிதம்பரத்தை கைது செய்ய விதித்த தடையை நாளை மதியம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சிபிஐக்கு எதிராக ப.சிதம்பரம் கோரிய மேல்முறையீடு முன் ஜாமீன் மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com