நிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்!

நிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்!

நிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்!
Published on

மாநிலங்களவையில் பட்ஜெட் 2019 மீதான விவாதத்தின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டி,  “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்ற மகாகவி பாரதியார் எழுதிய பாடலை பாடினார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்காக மட்டும் தான் வருத்தமாக இல்லை. ஜனநாயகம் தினமும் அடிவாங்கி வருவதற்காகவும் தான் மிகவும் வருந்துகிறேன். கர்நாடகா, கோவாவில் நிலவும் அரசியல் சூழலால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைவதை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் பேசினார்.

மேலும் வேலைவாய்ப்பு திண்டாட்டத்தினை விளக்க ஒரு எடுத்துக்காட்டை கூறினார், ப.சிதம்பரம். அதில் 62,907 கலாசி(சைலர்) காலிப்பணியிடங்களுக்கு 82 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 4,19,137 பேர் பி.டெக் பட்டதாரிகளாகவும், 40,751 பேர் எம்.இ பட்டதாரிகளாகவும் உள்ளனர் என்று கூறினார். இதற்காக தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை குறைக் கூறவில்லை, இது தான் தற்போதைய இந்தியாவின் நிலை என்றும் கூறினார் ப.சிதம்பரம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com