\
காங். தேர்தல் அறிக்கை குழுத் தலைவரானார் ப.சிதம்பரம்

காங். தேர்தல் அறிக்கை குழுத் தலைவரானார் ப.சிதம்பரம்

காங். தேர்தல் அறிக்கை குழுத் தலைவரானார் ப.சிதம்பரம்
Published on

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கை குழுவின் அமைப்பாளராக ராஜீவ் கவுடாவும் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக ஏ.கே.அந்தோணியும் நியமிக்கப்பட்டுள்ளனர். பரப்புரை குழுவின் ‌தலைவராக ஆனந்த் சர்மாவும் ஒருங்கிணைப்பாளராக ஜெய்ராம் ரமேஷும் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com