\
மாநிலங்களவை தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளராக ப. சிதம்பரம் தேர்வு

மாநிலங்களவை தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளராக ப. சிதம்பரம் தேர்வு

மாநிலங்களவை தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளராக ப. சிதம்பரம் தேர்வு
Published on: 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களவை தேர்தலில் தமிழக சட்டப்பேரவையின் வலுப்படி திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன. அதில் திமுகவிற்கு கிடைக்கவிருக்கும் 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என் ராஜேஷ்குமார், ரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஓர் இடத்திற்கு யார் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்துவந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com