இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? - ப.சிதம்பரம் சாடல்!

இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? - ப.சிதம்பரம் சாடல்!

இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? - ப.சிதம்பரம் சாடல்!
Published on

தனது உற்ற நண்பர் ட்ரம்பை கவுரவிக்க இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? என சாடியுள்ளார்  ப.சிதம்பரம். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே முதல் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இந்தியா குறித்த உரையாடல்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

இந்த விவாதத்தில் பேசிய ஜோ பைடன், ''அமெரிக்காவில் 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க ட்ரம்ப் அரசு தவறிவிட்டது. அமெரிக்கா இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான்'' என்றார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவைக் குற்றஞ்சாட்டினார். கொரோனா வைரஸ் மரணங்கள் குறித்த துல்லியமான எண்ணிக்கையை இந்தியா பகிரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்து பேசிய பைடன், “புவி வெப்பமயமாதலில் 15 சதவீத பங்கை அமெரிக்கா வகிக்கிறது,” என குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ட்ரம்ப் இந்தியாவை குற்றஞ்சாட்டினார். புவி வெப்பமயமாதலுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளும் முக்கிய காரணம் என்றார். 

இந்த அனல்பறந்த விவாதம் இந்திய அரசியலில் கவனம் பெற்றுள்ள சூழலில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''கொரோனாவால் உயிரிழந்தோர் விவரங்களை இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மறைப்பதாக ட்ரம்ப் பேசியுள்ளார்; அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாகவும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது குற்றச்சாட்டியுள்ளார்

தனது உற்ற நண்பரை கவுரவிக்க இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி?'' என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com