அசாதுதீன் ஒவைசி - தேஜஸ்வி யாதவ்
அசாதுதீன் ஒவைசி - தேஜஸ்வி யாதவ்web

பிஹார் தேர்தல்| இஸ்லாமியரின் மகனால் முடியாதா..? பரபரப்பை கிளப்பிய ஒவைசி!

பிஹாரில் துணை முதல்வர் வேட்பாளராக ஒரு இஸ்லாமியரை அறிவிக்கக் கூடாதா என்ற முழக்கத்துடன் மகாகத்பந்தன் வாக்குகளை வேட்டையாடும் நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ளார் ஒவைசி..
Published on
Summary

பிஹார் தேர்தலில், AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மல்லா சமூகத்தினர் துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும்போது, இஸ்லாமியர்களுக்கு அதே வாய்ப்பு ஏன் கிடைக்கவில்லை என அவர் கேள்வி எழுப்புகிறார்.

243 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பிகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகக் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுவதால் களம் சூடுபிடித்திருக்கிறது.

இந்தசூழலில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தங்களுடைய அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளைக் கவரும் வேலையில் இறங்கியுள்ளனர்.

பிஹார் தேர்தலில் பாஜக 101 இடங்களில் போட்டியிடும் பாஜக
பிஹார் தேர்தலில் பாஜக 101 இடங்களில் போட்டியிடும் பாஜகweb

அந்தவகையில், ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுடன், பிஹார் தேர்தலில் வலம்வருகிறார் எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி. தேர்தல்கால தமாக்காவாக மத்திய அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களுக்கு நிகராக அறிவிப்புகளை வெளியிடும் முயற்சிகளை கையிலெடுத்துள்ளார் தேஜஸ்வி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதச்சார்பு நிலையின் மற்றொரு முகமான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘முகமதுவின் மகன்’ என்ற புதிய முழக்கத்தை கையிலெடுத்து, மகாகத்பந்தன் கூட்டணியின் வாக்குகளை பிளக்கும் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளார்.

வி.ஐ.பி கட்சியின் தலைவர் முகாஸ் சஹானியை குறிப்பிட்டு அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு கவனித்தக்கதாக இருக்கிறது. பிஹாரில் 3 சதவீதமே உள்ள மல்லா சமூகத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் போது, 17 சதவீதம் உள்ள இஸ்லாமியர்களில் ஒருவர் கூடவா துணை முதல்வர் வேட்பாளராக கிடைக்கவில்லை என ஒவைசி வினா தொடுக்கிறார்.

பிஹார் மக்கள் தொகையில் பெரும் பங்கு வகிக்கும் இஸ்லாமியர்கள், ஆட்சியமைப்பவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் பணியில் மட்டும் ஈடுபட வேண்டுமா என்றும் கேட்கிறார். மல்லாவின் மகனால் துணை முதல்வர் ஆக முடியுமென்றால், முகமதுவின் மகனும் பிரதமராகவோ அல்லது முதலமைச்சராகவோ ஆகலாம் என பிஹார் இஸ்லாமியர்களின் உணர்ச்சியை தூண்டும் பரப்புரையை மேற்கொள்கிறார் ஒவைசி.

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

எதிர்க்கட்சிகள் தலைமைப் பதவிகளை வழங்காமல் முஸ்லிம்களின் வாக்குகளை மட்டுமே குறிவைக்கின்றன என்கிறார் அசாதுதீன் ஒவைசி. பாரதிய ஜனதாவுக்கு எதிராக உத்திகளை வகுக்க முடியாமல், அந்தக்கட்சியை காட்டி இஸ்லாமியர்களை பயமுறுத்தி எதிர்க்கட்சிகள் வாக்கு வேட்டையாடுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார். ஆனால் ஒவைசியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றாமல் கடந்து செல்ல முற்படுகிறார் ராஷ்ட்ரிய தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி. அவரை விடுங்கள்... என நேக்காக ஒவைசியின் கருத்துக்களை கடந்து செல்கிறார் தேஜஸ்வி.

இந்த இடத்தில்தான் தெலங்கானாவை மையமாக கொண்ட ஒவைசியின் கட்சிக்கு பிஹாரில் எந்தளவுக்கு ஆதரவு இருந்து விடப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. இங்கே முந்தைய தேர்தலை சற்று ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. 2020 பேரவைத் தேர்தலில், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐஎம் கட்சி பிஹாரில் 20 இடங்களில் போட்டியிட்டு, சீமாஞ்சல் பகுதியில் இருந்து ஐந்து இடங்களைக் கைப்பற்றியது. கிஷன் கஞ்ச், அராரியா, பூர்னியா, கதிஹார் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாஞ்சல் பகுதியில் சுமார் 40 சதவீதம் இஸ்லாமிய மக்கள் உள்ளனர்.

AIMIM-ன் வெற்றி, பல இடங்களில் RJD- காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு வங்கியைப் பிரித்து, எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது. மதச்சார்பு அரசியலின் ஒருமுகமாய் பாரதிய ஜனதா நிற்க, மறுமுகமாய் ஒவைசி நிற்கிறார். இது யாருக்கு சாதகம் என்பது கணிக்கக் கூடியதே..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com