இந்தியா
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த தமிழர்கள்!
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த தமிழர்கள்!
வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் பலர் அங்கேயே சிக்கியுள்ளனர். தற்போது அவர்கள் விண்ணப்பித்து இந்தியா வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளின் பணிபுரியும் சிலர் விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர்.
வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு விமானம் மூலம் வருகை தந்தவர்களை அவர்கள் தங்கும் இடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியினை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேற்கொண்டார். அரசு பேருந்து மூலம் அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்