அமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு

அமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு

அமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு
Published on

அமர்நாத் கோவிலில் 9 ஆயிரம் பக்தர்கள் நேற்று வழிபட்டனர். அவர்களை 150 க்கும் மேற்பட்ட வாகனங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர், பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். 15 நாட்களுக்கு முன்னர் தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டுள்ளனர். 
கடந்த திங்கள் கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற 7 பேர் கொல்லப்பட்டனர். இதனால், பக்தர்கள் தங்கி இருக்கும் முகாம்கள் மற்றும் அமர்நாத் கோவிலுக்குச் செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களை, ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமர்நாத் ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com