"ஆபிஸ் சென்று பணிபுரிவதை மிஸ் செய்கிறோம்" ஆய்வில் வெளியான ‘Work From Home’ பரிதாபங்கள்!

"ஆபிஸ் சென்று பணிபுரிவதை மிஸ் செய்கிறோம்" ஆய்வில் வெளியான ‘Work From Home’ பரிதாபங்கள்!

"ஆபிஸ் சென்று பணிபுரிவதை மிஸ் செய்கிறோம்" ஆய்வில் வெளியான ‘Work From Home’ பரிதாபங்கள்!
Published on

வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் இந்தியர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் 80 சதவிகித்தினர் அலுவலகம் சென்று பணிபுரிவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகிறார்கள். பொது போக்குவரத்துகள் இன்னும் பல மாநிலங்களில் தொடங்கப்படாததால் வீட்டில் இருந்தபடியே வேலைப் பார்க்கும் சூழல் தொடர்ந்து வருகிறது. ஐ.டி., முதற்கொண்டு பல்வேறு துறையினரையும் வீட்டிலேயே முடக்கியபடி வேலைப் பார்க்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா தொற்று.

இது குறித்து ஜேஎல்எல் ஆசிய பசிபிக் என்ற நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பில் 82 சதவிதி இந்தியர்கள் அலுவலகம் சென்று பணிபுரிவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அலுவலகம் சென்று பணிபுரிவது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அங்கு சங்க ஊழியர்களுடன் சேர்ந்து வேலைப் பார்க்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சக ஊழியர்களுடன் பேசிக்கொண்டு பணி புரிவதையே 82 சதவிகித இந்தியர்கள் விரும்புவதாகவும், மேலும் சில வேலைகளை வீட்டில் இருந்தே செய்யக் கூடிய வகையில் தேவையான உபகரணங்களை உபயோகிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மிக முக்கியமாக தினசரி அலுவலகம் சென்று வருவது ஒரு கடமை என்றும் அதையும் வீட்டில் இருந்து வேலை பார்க்கிறவர்கள் மிஸ் செய்வதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com