\
‘உள்ளங்கை ரேகை அச்சு’ கும்ப மேளாவில் புதிய கின்னஸ் சாதனை

‘உள்ளங்கை ரேகை அச்சு’ கும்ப மேளாவில் புதிய கின்னஸ் சாதனை

‘உள்ளங்கை ரேகை அச்சு’ கும்ப மேளாவில் புதிய கின்னஸ் சாதனை
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 8 மணி நேரத்தில் அதிக உள்ளங்கை ரேகை அச்சு பதிக்கப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர்.  இந்த விழாவில் உள்ளங்கை ரேகை அச்சு வைப்பதை 'paint my city' என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு இங்கு வருபவர்கள் தங்கள் உள்ளங்கை அச்சைப் பதிவு செய்யுமாறு நீண்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது.

இதில் 8 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளங்கை அச்சு பதிக்கப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை கின்னஸ் சாதனை அமைப்பின் நிர்வாகிகள் கும்பமேளா குழுவிடம் அளித்துள்ளனர்.

இதற்கு முன் கொரியாவின் சியோல் நகரில் 4675 மக்கள் உள்ளங்கை ரேகை அச்சு வைத்திருந்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. இதனை பிரயாக்ராஜ் நகரில் நடந்த உள்ளங்கை ரேகை அச்சு முறியடித்துள்ளது.

அத்துடன் இன்று மற்றொரு புது முயற்சியும் எடுக்கப்படவுள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர். அதாவது அதிகமான மக்கள் தரையை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடப் போவதாக விழா குழுவினர் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com