\
Over 20 people died in floods in Kashmir and Assam
Over 20 people died in floods in Kashmir and Assamweb

காஷ்மீர், அஸாமில் வெள்ளப்பெருக்கு.. 20க்கும் மேற்பட்டோர் பலி!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் அஸாம் என இரண்டு வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Published on
Summary

அஸாம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீரில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அஸாமில் மட்டும் 10 பேர், மேகாலயாவில் ஒரு குழந்தை, பூஞ்ச் மற்றும் ரஜோரியில் 11 பேர் உயிரிழந்தனர். பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகள் ஆபத்தளவை மீறி ஓட, ராணுவம், தேசிய பேரிடர் படை மீட்பில் ஈடுபட்டுள்ளன; யாத்திரைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அஸாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. மேலும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 5 முக்கிய ஆறுகளில் ஆபத்து அளவைத் தாண்டி தண்ணீர் ஓடுவதால் ராணுவமும், தேசியப் பேரிடர் படையும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அதேபோல ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரிமாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர்உயிரிழந்தனர். தொடர்மழையின் காரணமாக அமர்நாத் யாத்திரை, வைஷ்ணோ தேவி யாத்திரை மற்றும் சிவ்கோரி யாத்திரை ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் டெல்லி பயணத்தைக் பாதியிலேயே ரத்துசெய்துவிட்டுத் திரும்பிய முதல்வர் உமர்அப்துல்லா, மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை நேரில் கண்காணித்துவருகிறார். மத்திய அரசுமுழு உதவி அளிக்கும் என்று துணைநிலை ஆளுநரிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

Over 20 people died in floods in Kashmir and Assam
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை | கூட்டநெரிசலில் சிக்கி ஒருவர் பலி? 100க்கும் மேற்பட்டோர் காயம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com