ஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் !

ஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் !

ஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் !
Published on

இந்த ஆண்டு மட்டும் 2050 முறை எல்லை சண்டை நிறுத்த ஒப்பந்ததை பாகிஸ்தான் மீறியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003ஆம் ஆண்டு எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருநாடுகளும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறத்தப்பட்டிருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த போவதாக உறுதியளித்தன. 

இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 2050 முறை பாகிஸ்தான் எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 2003ஆம் ஆண்டு போடப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி செயல்படுமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கிற்கு முன்பு வரை இருநாடுகளும் எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடித்து வந்தன. எனினும் அதன்பிறகு 2016ஆம் ஆண்டு 228 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது. அதேபோல 2017ஆம் ஆண்டு 860 முறையும், 2018ஆம் ஆண்டு 1629 முறையும் பாகிஸ்தான் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com