ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!

ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!

ஹரித்வார் கும்பமேளா விழாவில் கடந்த 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன அம்மாநில அரசுகள்.

இந்நிலையில், ஹரித்வாரில் கும்பமேளா பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் ஹரித்வாருக்கு வந்து கங்கையில் புனித நீராடி செல்கின்றனர். கொரோனா இரண்டாவது அலை வீசி வரும் நிலையில் கூட்டம் மிகுதியின் காரணமாக ஹரித்வாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன்படி கும்பமேளாவில் கடந்த 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. “எங்கள் நம்பிக்கை எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். அந்த வலுவான நம்பிக்கையின் காரணமாகவே கங்கையில் நீராட இவ்வளவு பேர் இங்கு வந்துள்ளனர். கங்கை இந்த தொற்றுநோயிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்புகிறார்கள்” என்று கும்பமேளா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சித்தார்த் சக்ரபாணி தெரிவித்தார்.

இதனிடையே ஹரித்வாரில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 50,000 மாதிரிகளில், திங்களன்று 408 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 594 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக உத்தரகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com