ஒரே ஆண்டில் இந்திய குடியுரிமையை துறந்த ஒன்றரை லட்சம் இந்தியர்கள்

ஒரே ஆண்டில் இந்திய குடியுரிமையை துறந்த ஒன்றரை லட்சம் இந்தியர்கள்
ஒரே ஆண்டில் இந்திய குடியுரிமையை துறந்த ஒன்றரை லட்சம் இந்தியர்கள்

சென்ற ஆண்டில் மட்டும் 1,63,370 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், 2019ஆம் ஆண்டு முதல் 2021 வரை குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை வெளியிட்டார். அதன்படி இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020இல் 85,256 பேரும், 2021இல் 1,63,370 பேரும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

அமெரிக்கா நாட்டின் குடியுரிமையை பெறுவதே இந்தியர்களில் பலரது விருப்பமாக உள்ளது. 2021-இல் அதிகபட்சமாக 78,284 இந்தியர்கள் அமெரிக்க நாட்டின் குடியுரிமையை பெற்று உள்ளார்கள். அதற்கடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து,  இத்தாலி, நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன என நித்யானந்த ராய் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பரில் மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறும்போது, 5 ஆண்டுகளில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 162 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: ஆருத்ரா விவகாரம்: நிர்வாக இயக்குநர் உட்பட்ட ஐவரை கைது செய்ய இடைக்கால தடை! ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com