"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்" - பிரதமர் மோடி

"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்" - பிரதமர் மோடி

"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்" - பிரதமர் மோடி
Published on

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக பேசியுள்ளார்.

ஹரியானாவில் வரும் 21-ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சார்கி தாத்ரி என்ற இடத்தில் பிரமாண்டமான பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 70 ஆண்டுகளாக ஹரியானா விவசாயிகளுக்கான தண்ணீர், பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். அந்த தண்ணீர் இந்தியாவுக்கும், ஹரியானா விவசாயிகளுக்குமானது என்று அவர் சுட்டிக்காட்டினார். 

பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தப் போவதாகவும், அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் மோடி கூறினார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் உலகம் முழுவதும் பல தவறான கருத்துகளைப் பரப்பி வருவதாக பிரதமர் சாடினார். கடந்த வாரம் சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வந்‌தது குறித்தும், அவருடனான உரையாடல்கள் குறித்தும், மோடி நினைவுக் கூர்ந்தார். ஷி ஜின்பிங் தங்கல் திரைப்படம் பார்த்ததாக தன்னிடம் கூறியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com