"முக்கிய ஆவணங்களை கையாளும் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டது”- இண்டிகோ நிறுவனம் அதிர்ச்சி தகவல்

"முக்கிய ஆவணங்களை கையாளும் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டது”- இண்டிகோ நிறுவனம் அதிர்ச்சி தகவல்

"முக்கிய ஆவணங்களை கையாளும் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டது”- இண்டிகோ நிறுவனம் அதிர்ச்சி தகவல்
Published on

டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தங்கள் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, தங்கள் நிறுவனத்தின் சர்வர்கள் டிசம்பர் மாத தொடக்கத்தில் ஹேக் செய்யப்பட்டதாகவும் ஆனால் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் அந்த சர்வரை தற்போது மீட்டு விட்டதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது

இதில் சில முக்கிய ஆவணங்களும் இருந்ததாகவும், பொதுவில் வைக்க முடியாத அந்த ஆவணங்களை ஹேக்கிங் செய்தவர்கள் பொதுவெளியில் வைத்து விடக்கூடிய ஆபத்து இருந்தபோதிலும், தங்கள் நிறுவன அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த சர்வரை உடனடியாக மீட்டு விட்டதாகவும் கூறியுள்ளனர். எனவே எந்தவித பிரச்சனையும் இன்றி இண்டிகோ நிறுவனத்தின் விமான போக்குவரத்து நிறுவனம் இயங்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com