நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்: பிரதமர் மோடி

நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்: பிரதமர் மோடி

நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்: பிரதமர் மோடி
Published on

சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அம்பேத்கர் தேசிய நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இந்த நிகழ்சியில் பேசியவர், சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது.நாகரிகமான சமூதாயம் கொண்ட நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் வெட்கக் கேடானவை.குற்றவாளிகள் யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள் என உறுதி அளிக்கிறேன்.நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட 8 பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார்‌ அளித்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 8ம் தேதி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரை மீட்ட காவல்துறையினர் சிறுமியின் தந்தையான பப்பு சிங் என்பவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது, புகாருக்குள்ளான பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் தனது ஆதரவாளர்களுடன், மாணவியின் தந்தையை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தந்தை உயிரிழந்தார்.இச்சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காததால் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில் பிரதமர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com