ஸ்டான் சுவாமி மரணம் - குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்

ஸ்டான் சுவாமி மரணம் - குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்
ஸ்டான் சுவாமி மரணம் - குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்

சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி மரணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், “பொய் வழக்குகள் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது. இதேபோல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலரும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். தேவையற்ற வகையில் சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர். பொய் வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். எல்கர் பரிஷித் விவகாரத்தில் பொய் வழக்கு புனையப்பட காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பீமா கோரகான் வழக்கில் பலர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே குடியரசுத்தலைவர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடா, ஆர்.ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், இடதுசார் தலைவர் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

முன்னதாக, திருச்சியைச் சேர்ந்த ஸ்டான் சுவாமி ஜார்க்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தார். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டதாகக்கூறி கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஸ்டான் சுவாமி.

எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ஸ்டான் சுவாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஸ்டான் சுவாமி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com