எதிர்க்கட்சிகள் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை வேட்பாளராக நிறுத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக முன்னாள் சபாநாயகர் மீராகுமார் எதிர்கட்சிகள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.