'போட்டி' நாடாளுமன்றம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமா? - இன்று முக்கிய ஆலோசனை

'போட்டி' நாடாளுமன்றம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமா? - இன்று முக்கிய ஆலோசனை

'போட்டி' நாடாளுமன்றம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமா? - இன்று முக்கிய ஆலோசனை
Published on

பெகாசஸ் உளவு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை உணவு விருந்துடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக வியூகங்கள் வகுக்கப்படுமென தெரிகிறது.

குறிப்பாக போட்டி நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான திட்டம் குறித்தும் பேசப்பட உள்ளது. இதனிடையே பா.ஜ.க எம்.பிக்களுடன் பிரதமர் மோடியும் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். அப்போது எதிர்க்கட்சிகளின் வியூகங்களை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com