\
நாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி

நாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி

நாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி
Published on: 

இந்தியாவின் நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை என மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 

வரும் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் சந்திக்கும் மகாராஷ்ட்ராவில் மோடி தீவிர பரப்புரை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஜல்காவ் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, உலகமே புதிய இந்தியாவை காண்பதாகவும் இதற்காக மக்களவைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவு‌ம் கூறினார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் எதிர்க்கட்சிகள் மக்களை முட்டாளாக்கி வருவதாகவும் அவர்கள் விடும் முதலைக் கண்ணீரை யாரும் ஏற்கமாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com