பஞ்சாப் 2022 தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்

பஞ்சாப் 2022 தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்
பஞ்சாப் 2022 தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்

பஞ்சாப் 2022 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற பெரும்பான்மைன வாய்ப்புள்ளதாக ஏபிபி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

வருகிற 2022ஆம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறும் என ஏபிபி கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் அதிக வரவேற்பு கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியான சிரோமணி அகாலி தால் கட்சிகளில் எந்த கட்சி வெற்றிபெறும் என கேட்கப்பட்டிருந்தது. அதில், காங்கிரஸ் கட்சிக்கு 28.8 சதவீதமும், ஆம் ஆத்மிக்கு 35.1 சதவீதமும், சிரோமணி அகாலி தால் கட்சிக்கு 21.8 சதவீதமும், பாஜகவிற்கு 7.3 சதவீதமும் வெற்றி வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த 4 கட்சிகளில் ஏதேனும் ஒன்று 2022ஆம் ஆண்டு நடைபெறும் பஞ்சாப் தேர்தலில் அரியணையை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் பஞ்சாபின் 117 இடங்களில் ஆம் ஆத்மிக்கு 51-57 இடங்களில் வெற்றிவாய்ப்புகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆட்சிமீது பெரும்பான்மையான மக்களுக்கு திருப்தியில்லை என்பதும் இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக 60.8% பேர் தற்போதைய காங்கிரஸ் ஆட்சிமீது கடும் அதிருப்தியிலும், 12.6% பேர் அதிக திருப்தியிலும், 19% பேர் ஓரளவு திருப்தியுடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com