பீகாரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?: வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு..!

பீகாரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?: வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு..!
பீகாரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?: வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு..!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என  தேர்தலுக்கு  முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பீகாரில் அக்டோபர் 28-ஆம் தேதி, முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. பொதுமுடக்கத்திற்கு பிறகு நடத்தப்படும் முதல் தேர்தல் என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது.

இந்நிலையில், இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து, லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் தேர்தலுக்கு முந்தையை கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், மெகா கூட்டணியை விட(RJD-INC-CPIML-CPI-CPM) தேசிய ஜனநாயக் கூட்டணி (BJP-JD(U)-HAM-VIP) 6 சதவீத வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. அதாவது 38 சதவீதம் பேர் என்.டி.ஏ கூட்டணியும் 32 சதவீதம் பேர் மெகா கூட்டணியும் ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள்.

தற்போதைய கருத்துக் கணிப்பின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 5 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன. ஆனால் மெகா கூட்டணி கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 3.5 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றுள்ளன. லோக் ஜன்சக்தி கட்சி தனித்து தேர்தலை சந்திக்கிறது. சிராக் பஸ்வான் ஆட்சிக்கு வரவேண்டும் என 6 சதவீத மக்கள் விரும்புகிறார்கள். களத்தில் உள்ள மற்றவர்களுக்கு 24 சதவீத வாக்குப் பங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பில் 243 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி 133 முதல் 143 இடங்களைப் பெறக்கூடும் என்றும், மெகாக் கூட்டணி88 முதல் 98 இடங்களைப் பெறலாம் என்றும் தெரியவந்துள்ளது. எல்.ஜே.பி 2 முதல் 6 இடங்களைப் பெறும் என்றும் மற்றவர்கள் 6 முதல் 10 இடங்களைப் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com