“மும்பை டூ துபாய்” - விமானத்தில் பயணித்த ஒரே ஒரு பயணி!

“மும்பை டூ துபாய்” - விமானத்தில் பயணித்த ஒரே ஒரு பயணி!

“மும்பை டூ துபாய்” - விமானத்தில் பயணித்த ஒரே ஒரு பயணி!
Published on

இதுவோ கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் காலம். அதனால் பெரும்பாலான இந்திய மக்கள் பாதுகாப்பு கருதி வீடடங்கி உள்ளனர். இந்நிலையில் மும்பை மாநகரில் இருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் போயிங் 777-300 விமானத்தில் ஒரே ஒரு பயணி மட்டுமே பயணித்துள்ளார். அந்த அனுபவத்தை விமானத்தில் பயணம் செய்த அந்த பயணியே வீடியோவாக பகிர்ந்துள்ளார். 

“வழக்கமாக நான் வீடியோ படம் எடுத்து பகிர்பவன் கிடையாது. ஆனால் இப்போது அதை செய்துள்ளேன். அதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த விமானத்தில் நான் மட்டுமே பயணியாக பயணிக்கிறேன். இதனை ரொம்ப  ஸ்பெஷலாக கருதுகிறேன். விமானி விமானம் முழுவதும் என்னை டூர் அழைத்து சென்றார்” என சொல்லி வீடியோவை பகிர்ந்துள்ளார் அந்த அதிர்ஷ்டமிக்க பயணியான பவேஷ் ஜாவேரி. 

இந்த விமானத்தில் 350 பயணிகளுக்கு மேல் பயணிக்கலாம். இருப்பினும்  பவேஷ் ஜாவேரி தனி ஒருவராக பயணித்து அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com