சபரிமலை: வைகாசி மாத பூஜைக்கு முன்பதிவு தொடக்கம்

சபரிமலை: வைகாசி மாத பூஜைக்கு முன்பதிவு தொடக்கம்

சபரிமலை: வைகாசி மாத பூஜைக்கு முன்பதிவு தொடக்கம்
Published on

சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு, பக்தர்களின் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை கோயில் நடை வரும் 14 ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. சபரிமலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: 'எவ்வளவோ கெஞ்சினேன் ஆனா, என் கண் முன்னாடியே கொன்னுட்டாங்க' - ஹைதராபாத் பெண் கதறல்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com