\
வெங்காயம் விலை உயர்வு : இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

வெங்காயம் விலை உயர்வு : இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

வெங்காயம் விலை உயர்வு : இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
Published on

வெங்காய விலை உயர்வு விவகாரம் தொடர்பாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மாலை 5 மணியளவில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் பியூஸ் கோயல் உள்ளிட்ட சிலர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் வெங்காயத்தின் இருப்பு நிலையில் என்ன ? மற்றும் வெங்காயத்தின் விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com