“மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்”..வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நார்ட்2 போன்; காயமடைந்த பயனர்

“மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்”..வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நார்ட்2 போன்; காயமடைந்த பயனர்

“மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்”..வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நார்ட்2 போன்; காயமடைந்த பயனர்
Published on

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்ட் 2 5ஜி போன் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் உள்ள சில பயனர்கள் பயன்படுத்தி வருகின்ற போதே வெடித்து சிதறி வருகிறது. இந்நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் ஒரு இளைஞரின் வலது பக்க பேண்ட் பாக்கெட்டில் இருந்த போது வெடித்து சிதறியுள்ளது. 

இதனால் அந்த இளைஞரின் வலது பக்க தொடைப் பகுதி பலமாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இதை சுஹித் ஷர்மா என்ற இளைஞர், ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

“உங்களிடமிருந்து இதை எதிர்ப்பக்கவில்லை. உங்களது தயாரிப்பு என்ன தீங்கு விளைவித்துள்ளது என்று பாருங்கள். இதற்கான பதிலை நீங்கள் சொல்லியாக வேண்டும். பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள் மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்” என சுஹித் தனது ட்விட்டர் பதிவில் ஒன்பிளஸ் நிறுவனத்தை எச்சரித்துள்ளார். அதோடு வெடித்த போன் மற்றும் காயம் பட்ட போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளது. 

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பயனர் ஒருவரது கைப்பையில் இருந்த போது வெடித்தது. தொடர்ந்து டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரான கவுரவ் குலாட்டி, தனது வழக்கறிஞர் கவுனுக்குள் வைத்திருந்த ஒன்பிளஸ் நார்ட் 2 போன் வெடித்தது. தொடர்ந்து இப்போது மூன்றாவது முறையாக வெடித்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com