கேரளாவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஒரு வயது யானை!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ‘ஸ்ரீகுட்டி’ என்ற பெயர் கொண்ட ஒரு வயது பெண் யானை கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.
அங்குள்ள கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பாதுகாப்பாக பேணி வளர்க்கப்படுகிறது ஸ்ரீகுட்டி.
அந்த யானை பிறந்து ஒரு மாத காலம் மட்டுமே கடந்த நிலையில் தனது தாயை விட்டு பிரிந்துள்ளது. மீண்டும் கூட்டத்துடன் சேர முடியாமல் பலமாக காயம் பட்டு தவித்த அதை வன அதிகாரிகள் மீது வந்து சேர்த்துள்ளனர்.
தற்போது அது நலமாக உள்ள நிலையில் மறுவாழ்வு மையத்திற்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து ஸ்ரீகுட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர் அங்கிருந்த ஊழியர்கள்.
அதன்படி கரும்பு, வெல்லம் மற்றும் அன்னாசி பழங்களை கொண்டு கேக் தயாரித்து அதனை ஸ்ரீகுட்டியின் தும்பிக்கையால் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலரும் ஸ்ரீகுட்டியுடன் போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர்.