\
நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயத்தை அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னையை தீர்க்கும் 1956-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே தீர்ப்பாயம் அமைந்தால், காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட தீர்ப்பாயங்களின் நிலை கேள்விக்குறியாகும்.

தீர்ப்பாயத்தின் உத்தரவை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் எனச் சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் உத்தரவு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நிகரானது எனச் சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com