காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தொடர்கிறது

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தொடர்கிறது

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தொடர்கிறது
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹாஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து வீரர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்கு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். மேலும் அந்த பயங்கரவாதி வைத்திருந்த துப்பாக்கி, கையெறி வெடிகுண்டு போன்றவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அந்தப் பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளார்களா என்று பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com