நாடாளுமன்ற கூட்டுக்குழுமுகநூல்
இந்தியா
39 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா’வின் நாடாளுமன்ற கூட்டுக்குழு!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் 39 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் 39 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தோடு, அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் நடத்த வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இக்குழுவின் தலைவராக பாஜக எம்பி P.P.சவுத்ரி நியமிக்கப்பட்டார்.
இக்குழுவில், 31 பேர் இடம்பெறுவர் என கூறப்பட்ட நிலையில், எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தினர். அதன்படி, 27 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் என 39 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.