கர்நாடகா | தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை அழைத்து கொலை செய்த மர்ம கும்பல்

கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Police
Policept desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

ஓசூர் அடுத்த ஆனேக்கல் சூர்யாநகர் மரசூரு என்ற கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மனோஜ் பப்லு என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். இந்த வழக்கில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

Public
Publicpt desk

இந்த நிலையில் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமாருக்கு, இன்று அதிகாலையில் போன் கால் வந்துள்ளது. அப்போது அவரை போனில் அழைத்துப் பேசிய நபர் வீட்டை விட்டு வெளியே வரும்படி அழைத்துள்ளார். இதையடுத்து வெளியே வந்த விஜயகுமாரை, வெளியே காத்திருந்த மர்ம நபர்கள், சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

Police
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு – மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூர்யா நகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில், பெங்களூர் மாவட்ட கிராமப்புர காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன் பாலதண்டி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மனோஜ் பப்லு கொலைக்கு பழி வாங்கும் நோக்கில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

Police
Policept desk

அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com