கேரளாவில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் சீனாவையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான மாணவி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் கேரளாவில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.