\
ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி

ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி

ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி
Published on

ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கட்டடச் சரிவில் சிக்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர். 

ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் பகுதியில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்று சரிந்தது. இந்தக் கட்டடத்தில் 30 ராணுவ வீரர்கள் மற்றும் சில பொதுமக்கள் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு பணியில் ஈடுபட்டது. 

இந்நிலையில் தற்போது வரை இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களில் 17 ராணுவ வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் இடிபாடுகளில் இன்னும் 6 பேர் சிக்கியிருக்க கூடும் என்பதால் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com