இந்தியா
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: சிவ்ராஜ்சிங் சவுகான்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: சிவ்ராஜ்சிங் சவுகான்
மத்தியப் பிரதேசத்தில் கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இலவச கல்வி, இலவச குடும்ப அட்டை, வட்டியில்லா கடன் தரப்படும் என்றும் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை மத்தியப்பிரதேசத்தில் 3,500 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்துள்ளார்.