குழந்தைகளுக்கு குறி வைக்கும் ’ஒற்றைக்கண்’ அன்சாரி!

குழந்தைகளுக்கு குறி வைக்கும் ’ஒற்றைக்கண்’ அன்சாரி!

குழந்தைகளுக்கு குறி வைக்கும் ’ஒற்றைக்கண்’ அன்சாரி!
Published on

தனியாகச் செல்லும் சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபடும் ’ஒற்றைக்கண்’ அன்சாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை புறநகர் பகுதியை சேர்ந்தவர் அயாஸ் முகமது அன்சாரி. ஒரு கண் தெரியாது. மும்பை மற்றும் மும்பை புறநகர் பகுதிகளில் தனி யாகச் செல்லும் சிறுமிகளைப் பின் தொடர்ந்து செல்வார் அன்சாரி. வீடுகளை நோட்டம் விடுவார். யாரும் இல்லை என்று தெரிந்தால், ‘எங்கம்மா போற. நான் உங்கப்பாவோட பிரெண்ட். என்னைய தெரியலையா?’ என்று கேட்பார். சிறுமி யோசனையில் விழிக்கும். பிறகு, ’எங்கூட வா. ஒரு போன் நம்பரை தரேன். உங்கப்பாகிட்ட கொடு’ என்று அழைப்பார். அந்தப் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு ஒதுக்குப் புறமான இடத்துக்கு அழைத்துச் செல்வார். அக்கம் பக்கம் யாருமில்லை என்பதை தெரிந்துகொண்டு கத்தியை காட்டி, உடைகளை கழற்றச் சொல்வார் பிறகு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, ‘யாரிடமும் சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டி சென்று விடுவார். சுமார் 50 சிறுமிகளை இப்படி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இந்த அன்சாரி என்கின்றனர் காவல்துறையினர்.

(சிறுமியை அழைக்கும் அன்சாரி)

கடந்த 2013-ம் வருடம் ஜூஹூ பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவர் டியூஷன் சென்றுவிட்டு வந்தார்.  வழக்கம் போலவே, அந்தச் சிறுமியைப் பின் தொடர்ந்த அன்சாரி, சிறுமியின் வீட்டுக்குப் போனார். அங்கு வயதானப் பெண்மணி ஒருவர் மட்டும் இருப்பதைப் பார்த்தார். பிறகு, அந்த சிறுமியை அழைத்து, ‘அப்பா எங்க?’ என்று கேட்டுள்ளார். ’வீட்டுல இல்லை’ என்று சொல்லியிருக்கிறார் அந்த சிறுமி. பிறகு அவரது வழக்கப்படி பொய்சொல்லி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியிருக்கிறார். இதைக் கண்ட செக்யூரிட்டி பாட்டியிடம் சொல்ல, போலீசுக்கு போயிருக்கிறார்கள். 

மும்பை முழுவதும் இதே போல ஏகப்பட்ட புகார்கள் வர, தடுமாறியது போலீஸ். பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு ஆங்காங்கே இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அன்சாரியை அமுக்கியது போலீஸ். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளிவந்தன. சுமார் 50-க்கும் மேற்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தும் இயற்கைக்கு மாறாக உறவு வைத்தும் கொடுமைப்படுத்தியதை ஒப்புக்கொண்டார் அன்சாரி. அவர் மீது 13 வழக்குகள் உள்ளன.

இதில் ஒரு வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு வழக்கின் விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நேற்று வந்தது. அவருக்கு மரணத் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து தூக்குத் தண்டனை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com